என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் படுகாயம்"
- ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார்
- சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் :
இரணியல் அருகே தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதைக்காக நெய்யூர்-பரம்பை மேம்பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறி வருகின்ற னர். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் மணவாளக்கு றிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழகியமண்டபம் செல்ல திங்கள்நகரில் இருந்து பைக்கில் சென்றார். அவர் தடுப்பு வேலிகளை கவனிக்காமல் நெய்யூரில் இருந்து அழகியமண்டபம் சாலையில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாரா தவிதமாக மேம்பால த்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகையை கவனிக்க தவறி விழுந்து படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது திடீரென மாடிப்படியில் ஏறிச் சென்ற கரண்குமார் மாடியில் இருந்து குதித்தார்.
- வாலிபர் போலீஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் கரண்குமார் (வயது 30). இவர் செல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதிக்கு பொருட்கள் வாங்க வந்தார். அப்போது ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்சேட் தலைமையிலான வத்தலக்குண்டு போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றியதால் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் செல்போன் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகப்பட்டு கரண்குமாரை அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது திடீரென மாடிப்படியில் ஏறிச் சென்ற கரண்குமார் மாடியில் இருந்து குதித்தார்.
இதில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடி துடித்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்த போலீசார் கரண்குமாரை உடனடியாக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் படுகாயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கரண்குமாரின் உறவினர்கள் கூறுகையில், செல்போன் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட கரண்குமாரை அழைத்து வந்த போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீசாரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கரண்குமார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க மாட்டார். அப்படியே இருந்தாலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை தண்டனை கொடுத்திருக்கலாம். ஆனால் போலீசார் தாக்கியுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், கரண்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து வந்தோம். இரவு உணவு வாங்கி கொடுத்தோம். காலையில் கழிவறை செல்வதாக கூறிச் சென்ற அவர் திடீரென மாடியில் இருந்து குதித்தார். நாங்கள் அவரை துன்புறுத்தவில்லை என்றனர்.
இந்த நிலையில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்தினார். இரு தரப்பிலும் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
வாலிபர் போலீஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார்.
- இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கெட்டி சமுத்திரம் ஏரி கரை பெரு மாள் கோவில் பகுதியில் இருந்து சங்கரா பாளையம் சுமை தாங்கி கல் பகுதி வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதை சரி செய்யும் பணி தொடங்கியது. இதையடுத்து குண்டும் குழியுமான ரோடு பறிக்கப்பட்டு இருந்தது.
இதனால் சாலைகளில் ஜல்லி மற்றும் கற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. கடந்த 3 நாட்களாக பறித்து போடப்பட்டு பணிகள் செய்யாமல் இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அந்த கற்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (25) ஐ.டி கம்பெனியில் பணி புரியும் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சங்கரா பாளையத்தில் இருந்து அந்தியூருக்கு வந்து கொண்டி ருந்தார்.
அப்போது சாலையில் ஆங்காங்கே பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூரில உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. ஆனால் பல இடங்களில் கற்கள் சிதறி கிடப்பதால் சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது.
எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து விபத்து க்கள் மேலும் நடை பெறாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கி ன்றனர்.
- புட்டிரெட்டிப்பட்டி ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார்.
- தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடத்தூர்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி பகுதி சேர்ந்த சௌந்தரராஜ் மகன் சக்தி.
இவர் கடத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தாளநத்தம்- புட்டிரெட்டிப்பட்டி ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த டிராக்டர் ஒன்று சக்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சக்திக்கு படுகாயம் ஏற்பட்டது,
உடனடியாக கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற சக்தி பின்பு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சக்தி அளித்த புகாரின் பேரில் தலைமறைவாகியுள்ள டிராக்டர் ஓட்டுனர் மீது கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியார் பஸ் நிலைய சிக்னலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
- போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் இந்த விபரீதம் நடந்தது.
மதுரை
மதுரை அம்பலத்தாடியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 45). சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்தார். பெரியார் மேம்பால சிக்னலை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்புராமன் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முன்பு போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது வழக்கம்.
அவர்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் (நேதாஜி ரோடு), கட்டபொம்மன் சிலை அருகில் பிரத்யேக பூத்துகள் அமைத்து தரப்பட்டது. ஆனால் போலீசார் 24 மணி நேரமும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டி ருக்கின்றனர்.
பெரியார் மேம்பால சிக்ன லில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. பெரியார் மேம்பாலத்தில் சிக்னலின்றி வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வாகனங்கள் அத்துமீறி செல்கின்றன.
இதனை போக்குவரத்து போலீசார் கவனிப்ப தில்லை. அதேபோல் பெரி யார் மேம்பாலத்தில் போக்கு வரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகள் மதிப்பதும் இல்லை.
இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி பெரி யார் மேம்பாலத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதி முறைகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று காள வாசல் சிக்னலிலும் போலீசார் பெரும்பாலும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்துள்ளனர். தானி யங்கி சிக்னல் என்பதால் போலீசார் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முன்வருவதில்லை. தானியங்கி சிக்னல் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சென்று விடுவார்கள் என்ற அலட்சிய போக்கு போலீசாருக்கு உள்ளது.
சாலை சந்திப்பில் நின்று போக்குவரத்தை போலீசார் ஒழுங்கு படுத்தினால்தான் வாகன ஓட்டிகளும் சீராக சென்று வருவார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். காளவாசல் சிக்னல் பகுதியிலும் போலீசார் சாலையில் நின்று போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மகேந்திரன் கறி வெட்டும் தொழில் செய்து வருகிறார்
- இரவு வழக்கம் போல் டேபிள் மின்விசிறி அருகில் மகேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35). கறி வெட்டும் தொழில் செய்துவரும் இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டேபிள் மின்விசிறி அருகில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரத விதமாக மின்விசிறி திடீரென தீப்பிடித்தது. மின்விசிறியின் ஒயருக்கு அடியில் படுத்திருந்த மகேந்திரன் மீது மின்சாரம் தாக்கி தீ பிடித்துள்ளது. இதில் மகேந்திரன் போர்த்தியிருந்த போர்வை முழுவதும் தீப்பிடித்ததால் படுகாயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மதுரையில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தனர்.
- இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.
மதுரை
மதுரை எல்லீஸ் நகரில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .அவர் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் மோட்டார் சைக்கிளில் பெரியார் பஸ் நிலையம் வழியாக எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது.இதில் படுகாயம் அடைந்த வேல்முருகனை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.
- கொடைக்கானல் ஏரிச்சாலையில் கனரக வாகனங்கள் நுழையாதபடி பல இடங்களில் குறுகிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
- தடையை மீறி லாரி வந்ததால் விபத்து ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
கொடைக்கானல் :
கொடைக்கானலை சேர்ந்த காதர்மைதீன் மகன் ஜாவித்அப்சர்(19). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் ஏரிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஜாவித்அப்சர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்ககு பின்பு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஏரிச்சாலையில் கனரக வாகனங்கள் நுழையாதபடி பல இடங்களில் குறுகிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் லாரிகள் தடையை மீறி சென்றுவருவது வாடிக்கையாக உள்ளது. அதுபோன்று வந்த ஒரு லாரியால்தான் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நகராட்சி மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தையொட்டி உள்ள செய்யாற்றில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டுகளில் மணல் கொள்ளை சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தச்சூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 21). இவர் இன்று காலை தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்து ஆரணி தேவிகாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தச்சூர் பாலாற்றில் தொடர் மணல் கொள்ளை சம்பவம் அதிகம் நடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுத்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்